தளபதி விஜய் அடுத்தடுத்து 3 படங்களில் கமிட் ஆனதாக வெளியான தகவல் - உண்மை நிலவரம் என்ன ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்பார்ப்பு எகிறும்.  ஒவ்வொரு முறையும் அவர் நடிக்கவிருக்கும் படங்கள் குறித்த தகவல்கள் வெளியானால் அது நிச்சயம் சமூக வலைதளங்களில் மிகப்பெறும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.

Clarification about Thalapathy Vijay's Next 3 film | தளபதி விஜய் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து தகவல் இதோ

தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி விஜய், அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'தளபதி 65' படத்தில் நடிக்கவிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக இசையமைப்பாளர் தமன், தளபதி விஜய்யுடன் இணைகிறார்.  கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்த பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக 'மெர்சல்' தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் 'தளபதி 66' படத்துக்காகவும், அடுத்ததாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக தயாரிப்பாளர் லலித் குமாருடன் 'தளபதி 67' படத்துக்காக இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவல் குறித்து எங்கள் தரப்பு விசாரிக்கையில் 'தளபதி 65' மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது என்றும் விஜய் அதற்கடுத்து நடிக்கும் படங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Clarification about Thalapathy Vijay's Next 3 film | தளபதி விஜய் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்து தகவல் இதோ

People looking for online information on Sri Thenandal Films, Thalapathy 65, Thalapathy 66, Vijay will find this news story useful.