www.garudabazaar.com

"இத்துனூண்டு டிஷ்யூ வெச்சு.. பத்தினியா.. இல்லையானு".. "மண்ணாங்கட்டி".. சின்மயி ஆவேசம்.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகி சின்மயி பல்வேறு விஷயங்களைப் பேசி வீடியோ பதிவு ஒன்று பதிவிட்டிருக்கிறார்.

Chinmayee angry speech on Deciding virginity சின்மயி video

அவருடைய இந்த காட்டமான வீடியோ பதிவு வெகு வேகமாக பரவி வருகிறது இந்த வீடியோவில் பேசிய சின்மயி, “இத்துனூண்டு டிஷ்யூ வைத்து ஒரு பெண் பத்தினியா? இல்லையா? பவித்ரமான பெண்ணா? இல்லையா? என்றெல்லாம் பேசுவது என்ன மாதிரியானது? ஒரு வயதுக்கு மேல் ஆண்கள் செய்துகொள்ளும் தன்னின்பங்களை காரணம் காட்டி அவர்களை பெண்கள் யாரேனும் நிராகரிக்கிறார்களா?

Chinmayee angry speech on Deciding virginity சின்மயி video

சாலையில் சர்வசாதாரணமாக இயற்கை உபாதைகளை கழிக்கும் போது மாதவிடாய் இரத்தத்தை பார்த்தால் மட்டும் கொதித்து எழுவது என்பதெல்லாம் ஒன்றும் தேவையில்லை. மாதவிடாய் ரத்தம் வரவில்லை என்றால் விர்ஜினே கிடையாது, கேவலமான பெண் என்றெல்லாம் சொல்வார்கள் என்றால் அதைவிட கேவலமான நபர்கள் உலகத்தில் இல்லை.

Chinmayee angry speech on Deciding virginity சின்மயி video

hymen இருந்தால்தான் நான் விர்ஜின் இல்லையென்றால் விர்ஜினே இல்லை, இதற்காக நான் சர்ஜரி செய்து கொள்கிறேன் என்று சொன்னால், இதைவிட ஒரு மோசமான சமூகமே கிடையாது. குறிப்பாக பெண்களின் மாதவிடாயை அடிப்படையாக வைத்து, இந்த திசையில் நிற்காதே.. இங்கே உட்காராதே .. அங்கு படுக்காதே, இந்தத் துணியை தனியாக எடு, தலைக்கு குளி தீட்டு போய்விடும்.. என இந்த மண்ணாங்கட்டி எல்லாம் பெண்களுக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதைவிடவும், இதற்கு புதிது புதிதாக கான்செப்டை உருவாக்கி இது எல்லாத்துக்கும் பின்னால் அறிவியல் காரணங்கள் இருப்பதாக வேறு பலர் சொல்லி வருகிறார்கள்.

Also Read: அமானுஷ்யம்.. திகில் என விறுவிறுப்பான சீரியல் முடிஞ்சிருச்சா?!... நடிகரின் உருக்கமான Post!!

உண்மையில் இந்த அறிவியல் காரணங்களை மருத்துவர்கள் வெளியிடுகிறார்களா? அல்லது மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளின்படியாவது இவை வெளியிட படுகின்றனவா? என்பதையெல்லாம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், மாதவிடாய் இருக்கும் ஒரு பெண் தட்டு ஒன்றை தொட்டு, அது தரையை தொட்டு, அதன் மூலம், இந்த பூமியை தொட்டு, பூமி மூலமாக இந்த உலகமே தீட்டு பகுதியாக ஆகிவிடாதா?” என்று பேசியுள்ளார்.

மேலும் சின்மயி பேசியிருக்கும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

"இத்துனூண்டு டிஷ்யூ வெச்சு.. பத்தினியா.. இல்லையானு".. "மண்ணாங்கட்டி".. சின்மயி ஆவேசம்.. VIDEO! வீடியோ

Tags : Chinmayee

Chinmayee angry speech on Deciding virginity சின்மயி video

People looking for online information on Chinmayee will find this news story useful.