www.garudabazaar.com

நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் ? - அதிர்ச்சி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Bomb threat to Actor Suriya's offce | நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் சூர்யா தனது அகரம் ஃபவுண்டேசன் சார்பாக குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறார். மேலும் கல்வி தொடர்பான பிரச்சனைகளுக்கு அவர் தொடர்ந்து தனது கண்டனங்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் நீட் தேர்வு தொடர்பான அவரது அறிக்கை பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம். போலீஸார் அந்த தகவல் குறித்து தற்போது விசாரணையில் அந்த தகவல் பொய்யானவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது முழு விவரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Suriya

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bomb threat to Actor Suriya's offce | நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

People looking for online information on Suriya will find this news story useful.