www.garudabazaar.com

யாமி முதல் கத்ரீனா வரை இந்த வருடம் பாலிவுட்டில் நடந்த காதல் டும் டும் டும் ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வருடம் பாலிவுட்டில் பல ஜோடிகள் ஒன்று சேர்ந்த காதல் திருமணம் குறித்து இந்த பதிவில் பாப்போம்.

Bollywood celebrities who tied knot in this year

திருமணம் என்பது கோலாகலமாக பலரும் கலந்துகொண்டு நடக்க கூடிய ஒரு நிகழ்ச்சி.கொரோனா பரவல் காரணமாக பலரும் கட்டுப்பாடுகளை பின் பற்றி தங்களது காதலர்களை கைபிடித்துள்ளார்.அந்த வகையில் இந்த வருடம் பாலிவுட்டில் நடந்த காதல் திருமணத்தை பற்றி இப்போது பாப்போம்.யாமி கௌதம்,  விக்கி டோனர் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற யாமி, இயக்குனரான ஆதித்யா தாரை காதலித்து ஜூன் 4ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரு வீட்டார் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். யாமி, யூரி என்ற படத்தில் ஆதித்யா தாரே உடன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood celebrities who tied knot in this year

நமது லிஸ்டில் அடுத்து இருப்பது ராஜ்குமார் ராவ் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஈடு கொடுத்து நடிக்க கூடியவர் தான் ராஜ்குமார் ராவ். இவர் பத்ரலேகா என்பவரை 11 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த நவம்பர் 15ஆம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

Bollywood celebrities who tied knot in this year

வருண் தவான் பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்.பல ரசிகர்களை கொண்டுள்ள இவர், அவர் பள்ளி காலத்து தோழியான நடாஷா தலாலை நீண்ட வருடங்களாக காதலித்து வந்தார். அலிபாக்கில் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்றாலும் இந்த திருமணத்தில் முக்கியமான குடும்ப நண்பர்களும் சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Bollywood celebrities who tied knot in this year

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலை சில வருடங்களாக காதலித்து வந்தார். இந்நிலையில் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வீட்டில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Bollywood celebrities who tied knot in this year

People looking for online information on Katrinakaif, Vickykaushal, Yaamigoutham will find this news story useful.