www.garudabazaar.com

பிரபல ஓடிடி தளத்தில் மாஸாக வெளியான ப்ளாக் விடோ.. மார்வெல் ஸ்டூடியோஸின் அடுத்த பிரம்மாண்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்பைடர்மேன், பேட்மேன், ஐயர்ன் மேன், உள்ளிட்ட சூப்பர் ஹீரோ கதைகள் பிரபலம். இவற்றின் ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களின் குவியலாக `அவெஞ்சர்ஸ்' படம் மார்வெல் ஸ்டுடியோவின் தயாரிப்பில் வெளியானது.

Black Widow released on Disney plus hotstar ப்ளாக் விடோ

இதேபோல் மார்வெல் ஸ்டூடியோஸின் ப்ளாக் விடோவில் ஸ்கார்லெட் ஜோஹன்சனின் நடாஷா கதாபாத்திரத்துக்கு மார்வெல் வரிசையில் வந்துள்ள கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் மற்றும் அவென்ஜர்ஸ்: இன்ஃபினிட்டி வார் ஆகியவைதான் பின்னணிக்கதைகள். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் தயாரிப்பில் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட கதாபாத்திரம் நடாஷா ரோமானோஃப். ஒரு சாதாரண பெண் எப்படி துணிச்சலான ப்ளாக் விடோவாக மாறினார் என்பதே இந்த கதை.

Black Widow released on Disney plus hotstar ப்ளாக் விடோ

மார்வெல் ஸ்டுடியோஸின் தலைவர் கெவின் ஃபைஜ் ப்ளாக் விடோ பற்றி  ஒரு நேர்காணலில் கூறும்போது “நடாஷாவுக்கு ஒரு பணக்கார பின்னணி உள்ளது…ஆனால் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே முடியாத அளவுக்கு இந்த காரெக்டரை உருவாக்கி உள்ளோம். மற்ற படங்களில் பார்த்ததை விட, ரசிகர்களுக்கு இந்த Black widow நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் தான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி த்ரில்லர் மார்வெல் திரைப்படமாக பிளாக் விடோ  திரைப்படம் தற்போது ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஒளிபரப்பாகிறது.

Black Widow released on Disney plus hotstar ப்ளாக் விடோ

நடாஷா ரோமானோஃப் எனும் பிளாக் விடோவாக நடித்துள்ள சர்வதேச நட்சத்திரமான ஸ்கேர்லெட் ஜோகன்சன்னின் அதிரடி சாகசங்களை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பரபரப்பான சஸ்பென்ஸ் நிறைந்த, மார்வெல் ஸ்டுடியோஸ் திரைப்படமான பிளாக் விடோ படத்தில் காணலாம்.

தனது இளமை பருவத்தில் ஒரு ஆபத்தான சதித்திட்டத்தை எதிர்கொள்ளும் நடாஷா, அதை எதிர்த்து துணிவுடன் போராடி, அவள் கடந்த காலத்தில் விட்டுச் சென்ற அவளின் மோசமான எதிரிகளை எதிர்கொள்வதாக கதைக்களம் அமைந்துள்ளது. 

சர்வதேச சூப்பர்ஸ்டார் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிக்கும் பிளாக் விடோ கேட் ஷார்ட்லேண்ட் இயக்கத்தில் உருவாகியுள்ளது. ப்ளோரென்ஸ் பக், ரேச்சல் வெய்ஸ் மற்றும் டேவிட் ஹார்பர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Also Read: ‘தேசிய விருது’ வென்ற இயக்குநர் வெற்றிமாறன் பிறந்த நாள்!! இளம் நடிகர் & பிரபலங்கள் வாழ்த்து!

Black Widow released on Disney plus hotstar ப்ளாக் விடோ

People looking for online information on Black Widow, DisneyHotstar, Kevin Feige, Marvel, Marvel Studios will find this news story useful.