www.garudabazaar.com

ஒருவேளை அது 'நெஜமா' நடந்துருச்சா?... ரசிகர்கள் மத்தியில் 'எகிறும்' எதிர்பார்ப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தினசரி 3 ப்ரோமோக்கள் வெளியாகும். ஆனால் இன்று இதுவரை 2 ப்ரோமோக்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. 3-வது ப்ரோமோ இன்னும் வெளியாகவில்லை. இதனால் பொறுத்து, பொறுத்து பார்த்த ரசிகர்கள் தற்போது பொங்கி எழுந்துள்ளனர்.

Bigg Boss Third promo still not released, Twitter Reacts

ஏன் இன்னும் 3-வது ப்ரோமோ போடல? ஒருவேளை எதுவும் பயங்கரமான சண்டை உள்ள நடந்துச்சா? இல்லை கமல் சார் பிறந்தநாள்ன்னு முன்னாடியே அவரோட காட்சிகளை ஷூட் பண்றீங்களா? என கேட்டு  வருகின்றனர். ஆனால் விஜய் தொலைக்காட்சி சார்பில் ப்ரோமோ குறித்து எந்தவொரு அறிவிப்பும் இல்லை.

இதனால் 9.30 மணி வரை டைம் இருக்கு எடிட்டர் சார் மெதுவா பண்ணுங்க என்றும், இன்னைக்கு ப்ரோமோ கெடையாது எல்லாம் போய் வேலைய பாரு எனவும் மீம் போட்டு தாளித்து வருகின்றனர். ப்ரோமோ வருமா? வராதா? என்பது 5 மணி தாண்டியும் கேள்விக்குறியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Third promo still not released, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.