www.garudabazaar.com

ரசிகர்களுக்கு 'மாஸ்' டிரீட் கொடுக்கும் பிக்பாஸ்... அப்போ அது 'உண்மை' தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகிய ஐவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Bigg Boss Tamil will be broadcast 4 hours continuously

நேற்று ஆரி, பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனால் மீதமிருக்கும் மூவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் ஆஜீத் குறைவான வாக்குகள் வாங்கியதாகவும் இதையடுத்து அவரிடம் உள்ள எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து அவர் காப்பாற்றப்பட்டார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அதை உண்மை என சொல்வது போல புதிய ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி சற்றுமுன் வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜயதசமியை முன்னிட்டு கிராமம், நகரம் என 2 குழுக்களாக பிரிந்து போட்டியாளர்கள் வீட்டை அலங்கரித்து சாமி கும்பிடுவது போல காட்சிகள் உள்ளன.

மேலும் நாளை மாலை 6.30 மணியில் இருந்து 10.30 மணி வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என கமல் அறிவித்து இருக்கிறார். ப்ரோமோவில் அனைவரும் இடம்பிடித்து இருப்பதால் இந்த வாரம் யாரும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை என்பது உறுதியாகி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil will be broadcast 4 hours continuously

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.