www.garudabazaar.com

சுரேஷ் 'வெளியே' போனதுக்கு இதுதான் காரணம்... 'மறைமுகமாக' சொன்ன கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் வலுவான போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் 3 வாரங்கள் அவர் கொடுத்த கண்டென்டை பார்த்து எக்கச்சக்கமான ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவருக்கு ஆர்மி ஆரம்பித்தும் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்தினர்.

Bigg Boss Tamil 4: Kamal talked about Suresh Elimination

இந்த வாரம் சுரேஷ், அனிதா, சனம், சோமசேகர், அர்ச்சனா, பாலாஜி மற்றும் ஆரி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். இதில் அர்ச்சனாவை கமல் முதலில் காப்பாற்றினார். தொடர்ந்து ஆரி, பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்த கமல், சுரேஷ் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். இதனால் சக போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் சிரித்துக்கொண்டே சுரேஷ் வெளியேறினார்.

கேப்ரியலா தவிர பிற போட்டியாளர்கள் பெரிதாக அழவில்லை. மேடையில் வந்து பேசும்போதும் சுரேஷ் இயல்பாகவே பேசி விடைபெற்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி முடியப்போகும் தருவாயில் கமல் ஒரு குறிப்பை அளித்துள்ளார். அதாவது சசுரேஷ் வெளியே சென்றதுக்கு நான் காரணம் என திட்டாதீர்கள். அதற்கான காரணம் வீட்டிற்கு உள்ளேயும் இருக்கலாம். அது சுரேஷாகவும் இருக்கலாம் என மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Kamal talked about Suresh Elimination

People looking for online information on Kamal Haasan, Suresh Chakravarthy will find this news story useful.