www.garudabazaar.com

'அவரை' விட நீங்க நல்லாவே 'கொளுத்தி' போடுறீங்க... கலாய்க்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திங்கட்கிழமை நடைபெற்ற நாமினேஷன் சடங்கில் வழக்கம்போல ஆரி, அனிதா, பாலாஜி, சம்யுக்தா, சுசித்ரா, சோம் மற்றும் ரியோ ஆகிய 7 பேரும் பட்டியலில் இடம் பிடித்தனர். ஆச்சரியமாக இந்த பட்டியலில் சனம் இடம்பெறவில்லை. அநேகமாக அவர் இந்த பட்டியலில் இடம் பெறாதது இதுதான் முதன்முறையாக இருக்கும் போல. முகத்தில் அவ்வளவு ஆச்சரியத்தை காட்டினார்.

Bigg Boss revealed Nomination Reasons, Netizens Reacts

இதில் ஆரி, பாலாஜியை நாமினேட் செய்தார். அதற்கு அவர் காரணமாக காதல் அவன் கண்ணை மறைக்குது என தெரிவித்து இருந்தார். அந்த இடத்தில் பிக்பாஸ் தன்னுடைய திருவிளையாடலை காட்டி விட்டார். அதாவது உள்ளே நாமினேஷன் செய்வதற்கு சொன்ன காரணங்களை வெளியில் போட்டுக்கொடுத்து விட்டார். இதை ஆரி, ஷிவானி, ரியோ, பாலாஜி என யாருமே எதிர்பார்க்கவில்லை. பாலாஜியின் வழக்கமான முகம் வெளிப்பட்டது.

யாருடா என்னைப்பார்த்து அப்படி சொன்னது? என்று செம காண்டில் சுற்றிக்கொண்டு இருந்தார். மேலும் ஷிவானியிடம் எனக்கு அப்படி எதுவும் இல்லை. ஏதாவது இருந்தா கண்டிப்பா சொல்றேன் என அவருக்கு ஆறுதல் வேறு தெரிவித்தது தான் காலக்கொடுமை. இதைப்பார்த்த ரசிகர்கள் சுரேஷ் சக்கரவர்த்தியை ரொம்ப மிஸ் பண்றீங்க போல பிக்பாஸ்? அதுக்காக நீங்களே அந்த வேலையை கையில் எடுத்துட்டீங்களா? என கலாய்த்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss revealed Nomination Reasons, Netizens Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.