www.garudabazaar.com

'பிகில்' நடிகையோட நடிச்சவரா இவரு?... வைரலாகும் 'பிக்பாஸ்' போட்டியாளர் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதில் மொத்தம் 16 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இளமையான மற்றும் பிரபலமானவர்கள் போட்டியாளர்களாக அதிகம் களமிறங்கி இருப்பதால், இந்தமுறை வெற்றியாளரை தேர்வு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Contestant Som Shekar acted with Reba Monica John

16 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றிருக்கும் சோம் என்கிற சோமசேகரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. விளம்பரமொன்றில் 'பிகில்' புகழ் ரேபா மோனிகா ஜானுடன் இருக்கும் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில், ''அழகான ரேபா ஜானுடன்,'' என சோமசேகர் பதிவிட்டு இருக்கிறார்.

 

மாடல், நடிகர், தற்காப்பு கலைஞர் என பன்முகங்களை கொண்டிருக்கும் சோமசேகர் சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் சூரரை போற்று படத்திலும் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கும் நிலையில் வலிமையான போட்டியாளராக சோம் உருவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Contestant Som Shekar acted with Reba Monica John

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.