Amir Pavani : "உண்மையிலயே சேர்ந்து பயணிக்க போறாங்களே..".. அமீர் & பாவனியோட புது கார்.! வைரலாகும் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி.
விஜய் டிவி சின்னத்திரையில் நாயகியாக வலம் வந்த பாவனி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டார். அதன்படி, கணவரை இழந்த பாவனி தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை வாழ்ந்து கொண்டிருப்பதாக பகிர்ந்து இருந்தார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக விஜய் டிவி கோரியோகிராபராக இருந்த அமீர் உள்ளே வந்தார்.
பிறகு பாவனிடம் விளையாட்டாக ஆரம்பத்தில் பேசினாலும், பின்பு சீரியஸாக தன்னுடைய காதலை பாவனிக்கு சொல்ல தொடங்கினார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து BB Jodigal நிகழ்ச்சி நடந்து வந்து கொண்டிருந்தது. அதன்படி BB Jodigal நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி இருவரும் டான்ஸ் பார்ட்னராக இணைந்து ஆடி வந்தனர்.
இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி இருவரும் இணைந்து ஒரு காரை வாங்கியுள்ளனர். ஆடி ரக காரான இந்த காருடன் அமீர், பாவனி மற்றும் அமீரின் மாணவி அலைனா ஆகியோர் நிற்கும் ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதியரின் ரசிகர்களோ, இவர்களுக்கு வாழ்த்து சொல்லி வருவதுடன், ‘உண்மையிலேயே சேர்ந்து பயணிக்க போகிறீர்கள்.. செம்ம’ என்று கமெண்டில் கொடுத்துள்ளனர்.
அதாவது ஏற்கனவே BB ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசனில் நடனமாடி கோப்பையை வென்று முடித்த தருணத்தில் பாவனி, அமீருக்கு ப்ரொபோஸ் செய்திருந்தார். அதில், “நீங்கள் மிகச் சிறந்த மனிதர். மாஸ்டர். டான்ஸ் ஆடும் போது மிகவும் உறுதுணையானவர். நல்ல நண்பர் . எனவே நம்முடைய வாழ்க்கை பயணத்தை சேர்ந்து தொடங்கலாம். என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த இணையராக இருங்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன். நீங்கள் எனக்காக எப்போதும் இருப்பீர்களா.? எப்போதும் ஐ லவ் யூ” என்று கூறியிருந்தார். இதுகுறித்துதான் ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். அதாவது வாழ்க்கையை போலவே, இருவரும் சொந்த காரில் சேர்ந்து பயணிக்க போகின்றனர் என்று வாழ்த்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Amir KISS Pavni 😍 என்ன என்ன பண்ண சொல்றாங்க பாருங்க 🤣 Fans காதலில் விழுந்த PAVMIR
- ஓடி போயி CRUISE-ல கல்யாணம் 😍 குழந்தையோட Next Time… 🥰 Pavni, Amir Marriage Plans Update 🌈
- Pavni-ய பூ போல தாங்கும் Amir... Note பண்ணுங்கப்பா ❤️😍 Eye-Candy Romantic Dance Video
- Pavni ஐ Single To Committed ஆக்கிய Amir, Single ஆன Life னு நினச்சேன் But Amir . . .
- 💃🕺Pavni தான் Real Title Winner, Dance வராது, என் கூட Travel பண்ணி Win பண்ணாங்க - Amir Proud Moment
- 💔Amir's Ex, Breakup பண்ண Girls-க்கு Thanks 😍 Jealous ஆன Pavni
- வாடா போடா நான் கூப்பிடுவேன், என்னை வாடி போடி னு அவங்க சொன்னதே இல்ல Cute Copule 💖 Pavmir
- 💖 Amir வேற Level Transformation, பெருமைப்பட்ட Pavni
- ❤️ PAVNI Possesive😍 AMIR-அ REJECT பண்ண Girls-க்கு THANKS😜 HEART Open பண்ணி LOVE கொட்டிட்டாங்க PAVMIR
- Pavni, Amir MARRIAGE GAMES 😍 ஐயர் வந்துட்டாரு! மாப்பிள்ளை, பொண்ணு Ready-ஆ 🥰 SWEET Twist
- AMIR Interviews PAVNI ❤️ மொத்த Love Secrets-யும் வாங்கிட்டாரு… Romantic கில்லாடி பா 😍
- Pavni Proposes Amir 1st TIME ❤️ உருகி உருகி காதல் சொன்ன PAVNI 😍 வெட்கப்பட்டு நெகிழ்ந்த AMIR 🥰 LOVE U