Video: 'திருட்டு' பையன்னு சொல்றாரு ஆனாலும் எகிறும் ரசிகர்கள்.. யார் 'இந்த' பாலாஜி முருகதாஸ்?
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் இந்தமுறை இளம்வயது போட்டியாளர்கள் அதிகம் களமிறங்கி இருக்கின்றனர். இதனால் வரும் நாட்களில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாலாஜி முருகதாஸ், சோமசேகர், ஜித்தன் ரமேஷ், ஆரி அர்ஜுனன் என பிட்னஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபர்களும் களத்தில் இறங்கி உள்ளனர்.

இதில் பாலாஜி முருகதாஸ் மிகவும் வலிமையான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாடல், நடிகர் என்பதை தாண்டி பாலாஜி முருகதாஸ் குறித்து மேலும் பல விஷயங்களை இங்கே பார்க்கலாம். 24 வயதாகும் பாலாஜி இதுவரை மிஸ்டர் பர்பெக்ட், மிஸ்டர் இந்தியா, ரூபாரூ மிஸ்டர் இண்டெர்நேஷனல் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றுள்ளார்.
நடிப்பில் ஆர்வம் கொண்ட பாலாஜி 'டைசூன்' என்னும் படம் வழியாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணை நிறுவனரான இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கம்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ளார். ட்விட்டர், இன்ஸ்டா ஆகியவற்றில் மிகவும் ஆக்டிவாக திகழும் இவரை இன்ஸ்டாவில் தற்போது 77,800 பேர் பின்தொடர்கின்றனர். பிக்பாஸ் முடியும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Bala | And lo! Bigg Boss Tamil Season 4 - List of Contestants! - Slideshow
- Bala | Top Tamil Cinema Celebrities Wedding photos - Slideshow
- Bala | Does Kollywood directors repeat these shots? - Slideshow
- Bala | 10 exciting combinations Thala & Thalapathy should consider - Slideshow
- Bala | 'Inspired Creators and their Inspiring Characters' - Slideshow