www.garudabazaar.com

இவ்ளோ நேர்மையா! நேரடி தாக்குதல்களால் 'அதிர்ந்து' போன போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு நாள் ஆகிறது. அதற்குள் யார் யார் எப்படி என்பதை ரசிகர்கள் ஓரளவு ஊகித்து விட்டனர். அவர்களின் ஊகம் சரிதான் என்பது போல போட்டியாளர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

Bigg Boss 4: Fans liked Jithan Ramesh's Honest Approach

குறிப்பாக நடிகர் ஜித்தன் ரமேஷின் நேர்மையான பேச்சும், நடவடிக்கையும் ரசிகர்களை கவர்ந்து விட்டன. கமலின் முன் ஜித்தன் ரமேஷ் பேசியபோதும் இவ்வளவு வெளிப்படையாக இருக்க வேண்டாம் என்பது போல கமல் கூறியிருந்தார். இருந்தும் அவரின் நேர்மையான குணத்தை அவரால் மாற்றிக்கொள்ள முடியாது என்றே அவரது நடவடிக்கைகள் சொல்கின்றன.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் உங்களுக்கு பிடித்த இருவருக்கு ஹார்ட்டையும், பிடிக்காத இருவருக்கு ஹார்ட் ப்ரோக்கன் சிம்பலையும் அளிக்கும்படி கூறினார். இதில் அதிகம் காயப்பட்டது ஷிவானி தான். ஆனாலும் ஜித்தன் ரமேஷ், கேப்ரியலா இருவரும் சனம் ஷெட்டிக்கு ஹார்ட் ப்ரோக்கன் சிம்பலை அளித்து அவர் நடிப்பது போல இருப்பதாக தெரிவித்தனர்.

இதைப்பார்த்த ரசிகர்கள் எப்படி பாஸ் இவ்வளவு நேர்மையா இருக்கீங்க என அவரை புகழ்ந்து வருகின்றனர். போற போக்க பார்த்தா கேர்ள்ஸ்க்கு போட்டியா அவருக்கு ஆர்மி ஆரம்பிச்சு ஓட்டு கேட்பாங்க போல! 

 

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4: Fans liked Jithan Ramesh's Honest Approach

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.