Reliable Software
www.garudabazaar.com

Video: வாத்தி கம்மிங்.. பிரபல சேனலில் Behindwoods Gold Icons விருது விழா! தெறிக்கவிடும் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திறமைக்கு சரியான வெகுமதியை அளிக்கும் அங்கீகாரமாகவும் பல வருட நம்பிக்கை அடையாளமாகவும் திகழும் Behindwoods விருதுகள் வழங்கும் விழாவுக்கு ரசிகர்களிடையே எப்போதும் ஏகோபித்த வரவேற்பு நிலவுகிறது.

Behindwoods Gold Icons to stream in vijay television promo viral

அதே உதவேகத்தில் தொடர் வெற்றிகளைக் குவித்த Behindwoods Gold Medal விருதுகள் வழங்கும் விழாவின் வரவேற்பைத் தொடர்ந்து Behindwoods Gold Icons விருதுகள் வழங்கும் விழா அண்மையில் கோலாகலமாக நடந்தது.

டிஜிட்டல், டெலிவிஷன் மற்றும் சோஷியல் தளங்களில் பரவலாக அறியப்படும் பலருக்கும் வழங்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், சின்னத்திரை தொடர் மற்றும் ரியாலிட்டி ஷோ பிரபலங்கள் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என திறமையாளர்கள் பலரும் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்காரா, நடிகை அபர்ணா பாலமுரளி, விஜய் ரியாலிட்டி ஷோக்களின் பிரபலமான அஸ்வின், சிவாங்கி, புகழ், பவித்ரா, பாலா, மணிமேகலை, திவ்ய தர்ஷினி என்கிற டிடி , நடிகர் கவின் , பிக்பாஸ் 4வது சீசன் டைட்டில் வின்னர் ஆரி, சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, ராமர் மற்றும் பலர் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலரும் முக்கிய விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னத் தலயுமான சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் தொடர்பான பிரம்மாண்ட விருது வழங்கப்பட்ட மாஸ் மொமண்ட் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் மே 30-ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Behindwoods Gold Icons to stream in vijay television promo viral

People looking for online information on BehindwoodsGoldIcons, Trending, VijayTelevision will find this news story useful.