www.garudabazaar.com

நாளை பெரிய அறிவிப்பு இருக்கிறது… எதிர்பார்ப்பை எகிற வைத்த உதயநிதி ஸ்டாலின்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Udhayanidhi stalin announcement in instagram made excitement

உதயநிதியின் சினிமா வருகை:

அரசியல் குடும்பத்தில் பிறந்த உதயநிதி ஸ்டாலின், சினிமாவில் முதலில் தயாரிப்பாளராக களமிறங்கினார். விஜய்யின் குருவி மற்றும் சூர்யா நடித்த ஆதவன் படங்களை தயாரித்து தன்னை திறமையான தயாரிப்பாளராக நிலைநாட்டிக் கொண்டார். பின்னர் திரைப்படங்களை தன்னுடைய ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் மூலமாக பல திரைப்படங்களை வாங்கி விநியோகம் செய்யவும் ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு தயாரிப்பு நிறுவனமாக ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் மாறியது.

Udhayanidhi stalin announcement in instagram made excitement

சினிமாவில் கதாநாயகன்:

இதையடுத்து எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ஒரு கல் ஒரு கல் கண்ணாடி படத்தின் மூலமாக அவர் அறிமுகமானார். இந்த படத்தில் சந்தானத்துடனான நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்து மக்களுக்கு பிடித்த பக்கத்து  வீட்டுப் பையன் போன்ற மென்மையான கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து கதிர்வேலன் காதல், இப்படை வெல்லும், கண்ணே கலைமானே, சைக்கோ மற்றும் மனிதன் ஆகிய படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகராக நிலைநிறுத்திக் கொண்டார். இணையாக தன் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வந்தார்.

Udhayanidhi stalin announcement in instagram made excitement

சினிமாவும் அரசியலும்:

இதே நேரத்தில் அரசியலிலும் ஆர்வமாக இருந்த உதயநிதி திமுகவில் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பை பெற்று தீவிரமாக செயல்பட்டு வந்தார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் கைவசம் இப்போது நெஞ்சுக்கு நீதி, மகிழ் திருமேனி இயக்கும் பெயரிடாதப் படம் ஆகியவை உள்ளன. அரசியல், சினிமா என இரண்டு துறைகளிலும் பயணம் செய்து வரும் அடுத்ததாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Udhayanidhi stalin announcement in instagram made excitement

மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதுப்படம்:

இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் நடந்த இயக்குனர் மாரி செல்வராஜின் புதுமனைப் புகுவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அதே போல சில தினங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு நடிகர் பஹத் பாசிலோடு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் தனனுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘நாளை மிகப்பெரிய அறிவிப்பு’ என வைத்துள்ளார். இதனால் நாளை மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் தலைப்போ, போஸ்டரோ அல்லது வேறு ஏதேனும் அப்டேட்டோ வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Udhayanidhi stalin announcement in instagram made excitement

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi stalin announcement in instagram made excitement

People looking for online information on Fahad Fassil, M K Stalin, Mari Selvaraj will find this news story useful.