www.garudabazaar.com

ஒரே ஆட்டம்-பாட்டம் தான்... மொத்தம் 16 பேரு எண்ட்ரி ... ஆனா 'அவங்க' லிஸ்ட்ல இல்ல!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரும்பாலும் பரிச்சயமான முகங்கள் என்றாலும் அடையாளம் வேண்டும் என துடிக்கும் சில போட்டியாளர்களுக்கும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பு அளித்துள்ளது.

BB Tamil 4: Full and Final list of Contestants this Season

எனினும் விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரை இந்த 4-வது சீசனில் களமிறக்கி இருக்கின்றனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 14 போட்டியாளர்கள் இருப்பார்கள் என எதிர்பார்க்க, 16 போட்டியாளர்கள் தற்போது உள்ளே எண்ட்ரி கொடுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை கீழே பார்க்கலாம்.

1. ரியோ ராஜ் 2. சனம் ஷெட்டி 3. ரேகா 4. பாலாஜி முருகதாஸ் 5. அனிதா சம்பத் 6. ஷிவானி 7. ஜித்தன் ரமேஷ் 8. வேல்முருகன் 9. ஆரி அர்ஜுனன் 10. சோமசேகர் 11. கேப்ரியலா 12.அறந்தாங்கி நிஷா 13. ரம்யா பாண்டியன் 14. சம்யுக்தா கார்த்திக் 15. சுரேஷ் சக்ரவர்த்தி 16. ஆஜீத்

இதில் பாடகர்கள் வேல்முருகன், ஆஜீத் மற்றும் நன்றாக நடனம் ஆடத்தெரிந்த கேப்ரியலா, ஷிவானி, ரம்யா பாண்டியன் இருப்பதால் ஆட்டமும்,பாட்டுமாக வரும் நாட்களில் பிக்பாஸ் இல்லம் அமர்க்களப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல ரியோ, நிஷாவின் ஒன்லைன் காமெடிகளுக்கும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

அதே நேரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜே அர்ச்சனா இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BB Tamil 4: Full and Final list of Contestants this Season

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.