www.garudabazaar.com

4-வது சீசன்லயும் கண்டினியூ ஆகுதே! 'அந்த' எடத்துக்கு இப்படி ஒரு ராசியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் போராகத்தான் இருந்தது. குறிப்பாக ப்ரோமோவில் வந்தவை நிகழ்ச்சியில் இடம்பெறவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து ஆரி அர்ஜுனா, ரேகா, சம்யுக்தா கார்த்திக் பகிர்ந்து கொண்டனர்.

BB 4: Fans talks about Kitchen Fight in Social media

சொல்ல வந்ததை தெளிவாக மூவரும் எடுத்து உரைத்ததால் வீணான கலாய்ப்புகளுக்கு இடமில்லாமல் போனது. அதே நேரம் அனிதா சம்பத்-சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான உரசல்கள் இன்றும் தொடர்ந்தன. நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால் இவர்கள் இருவரையும் வைத்து மீம்ஸ் போட்டு நெட்டிசன்கள் ஜாலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் கிச்சனுக்கு ஒரு ராசி இருப்பதை ரசிகர்கள் ஆதாரத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அது என்னவெனில் பிக்பாஸ் வீட்டின் முதல் சீசன் தொடங்கி தற்போதைய 4-வது சீசன் வரை வீட்டின் முதல் சண்டை கிச்சனில் தான் தொடங்கி இருக்கிறதாம். இதைப்பார்த்த பின்னர் ஓ இந்த கிச்சனுக்கு இப்படி ஒரு ராசி இருக்கிறதா? என பிக்பாஸ் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BB 4: Fans talks about Kitchen Fight in Social media

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.