www.garudabazaar.com

Video: என்ன ஒரு ஸ்பீடு... டாஸ்க்கை ஒழுங்கா 'வெளையாண்டது' இவங்க மட்டும் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோழி-நரி டாஸ்க்கை பார்த்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு பிக்பாஸை வச்சு செய்து வருகின்றனர். எவ்வளவு சண்டைகள் நடந்தாலும் ஜாலியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் லக்சுரி பட்ஜெட்டில் கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த டாஸ்க்கை சுவாரஸ்யமாக விளையாடியது பாலாஜி தான் என்பது நெட்டிசன்கள் கருத்தாக உள்ளது.

Balaji Murugadoss played well as Hen and Box in BB

பாலாஜி மட்டும் தன்னுடைய முட்டையின் மீது அமர்ந்து உடைக்காமல் இருந்திருந்தால் இந்த டாஸ்க் இன்னும் சுவாரஸ்யமாக இருந்து இருக்கும். மூன்று கோழிகளின் முட்டைகளை தொட்டது மட்டுமின்றி, மூன்று நரிகளின் வாலையும் பாலாஜி பிடுங்கினார். இதனால் தற்போது அதிகமான பணம் அவர் வசம் தான் இருக்கும் என தெரிகிறது.அதே போல ரியோவும் இந்த டாஸ்க்கை நேர்மையுடன் விளையாடினார்.

மற்றவர்கள் போல இவர் ரூல்ஸை எந்த இடத்திலும் மீறவில்லை. ரியோ கோழியாக இருந்தபோது அவரின் முட்டையை அனைவரும் சென்று அடித்து பிடித்து தொட்டனர். இதைப்பார்த்த அவர் தீர்ப்பை பிக்பாஸின் பக்கமே திருப்பி விட்டார். இதையடுத்து ரியோவுக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்க, ஆரி மற்றும் பாலாஜி இருவரும் சேர்ந்து ஜாலியாக ரியோவை கலாய்த்து அவரின் முட்டையை பிடுங்கி பணத்தை பங்கு போட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss played well as Hen and Box in BB

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.