Reliable Software
www.garudabazaar.com

Video - குரங்குடன் கொஞ்சி விளையாடும் பாபா பாஸ்கர்... அவ்ளோ கியூட்... வேற லெவல் சார் நீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

baba bhaskar cute video playing with monkeys குரங்குகளுடன் விளையாடும் பாபா பாஸ்கர்

இந்நிலையில் கடந்த சீசன் கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோர் இந்த சீசனிலும்  பங்கெடுத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எனினும் இந்த சீசன் பலருக்கும் எப்போது பேவரைட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். இந்நிலையில் பாபா பாஸ்கர் மாஸ்டர்  தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். பாபா பாஸ்கர் மாஸ்டருக்கு பொதுவாகவே இறை பக்தியிலும் மற்ற ஜீவன்கள் மீதும் பாசம் அதிகம். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குரங்குகளுடன் விளையாடி அவற்றுக்கு உணவு அளிக்கும் க்யூட்டான ஒரு வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார்.

VIDEO - குரங்குடன் கொஞ்சி விளையாடும் பாபா பாஸ்கர்... அவ்ளோ கியூட்... வேற லெவல் சார் நீங்க..! வீடியோ

baba bhaskar cute video playing with monkeys குரங்குகளுடன் விளையாடும் பாபா பாஸ்கர்

People looking for online information on Baba Bhaskar will find this news story useful.