www.garudabazaar.com

Baakiyalakshmi : ராஜதந்திரம் அனைத்தும் வீணாகிடுச்சே! சுடிதார்ல வந்த பாக்யா.. கடுப்பான ராதிகா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு பக்கம், கோபி மற்றும் ராதிகா ஆகியோரிடையே நடைபெறும் நிகழ்வுகளும், மறுபக்கம் பாக்கியா தனது குடும்ப நிலையை உயர்த்த கடினமாக உழைக்க முயற்சிப்பது குறித்தும் பாக்கியலட்சுமி தொடர் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பிரபல 90ஸ் புகழ் நடிகர் ரஞ்சித்தும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கி உள்ளார்.

Baakya wears Churidar Baakiyalakshmi new promo பாக்யா

இந்த நிலையில், கோபியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சதீஷ், அண்மையில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அதே பெயராகவே ரசிகர்கள் மத்தியில் மாறி போனவர் நடிகர் சதீஷ். காமெடியாக, பதற்றம் நிறைந்து என அனைத்து ஏரியாவிலும் சிறப்பாக நடித்து சிக்ஸர் அடிக்கும் சதீஷ், அண்மையில் தான் தொடர்ந்து பாக்கியலட்சுமியில் நடிப்பதை வீடியோ மூலம் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே ராதிகாவின் தொடர் தடுப்பு முயற்சிக்கு பிறகு பாக்கியலட்சுமி, ராதிகாவின் அலுவலகத்தில் சமையல் காண்ட்ராக்டை அந்த மேனேஜர் மூலம் வாங்கி விட்டார். எனினும் பாக்கியலட்சுமியின் ஆங்கிலத் திறமையை ராதிகா கிண்டலடித்து தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதால் பாக்கியலட்சுமி அவரை எதிர்கொள்ளும் வலிமையை சம்பாதிக்கும் வகையில் இங்கிலீஷ் வகுப்புக்கு செல்ல தொடங்கினார். அந்த வகுப்பில்தான் நடிகர் ரஞ்சித் இணைந்துள்ளார்.

பழனிசாமி என்கிற கேரக்டரில் ரஞ்சித் தனக்கே உரிய கலகலப்பான கொங்கு பாஷையில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறார். இதனிடையே பாக்கியலட்சுமியின் சமையல் காண்ட்ராக்ட் திறப்பு விழாவுக்கு ரஞ்சித் மற்றும் பாக்கியலட்சுமியுடன் ஆங்கில வகுப்பில் பயிலும் நண்பர்கள் வந்து போக, இதுகுறித்து பாக்கியலட்சுமியின் மாமியாருக்கும் தெரிந்து விட்டது. எப்படியோ அவரையும் ஒரு வழியாக பாக்கியலட்சுமி சமாதானப்படுத்தி விட்டார்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி - ராதிகா இடையிலான போர் அதிகரித்து இருக்கிறது. அதன் ஒரு அங்கமாக பாக்கியலட்சுமியும் அவரது சமையல் குழுவினரும் சுடிதார் அணிந்துதான் வேலைக்கு வரவேண்டும் என ராதிகா நெருக்கடி தருகிறார். இப்படி சொன்னால், பாக்கியலட்சுமியும் அவரது குழுவினரும் இதை செய்ய மறுப்பார்கள், அதை சாதகமாக பயன்படுத்தி அவர்களின் வேலை தொடர்ந்து நடப்பதை நிறுத்திவிடலாம் என்பது ராதிகாவின் கணக்கு. ஆனால் அதை முறியடிக்கும் வகையில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அவரது சமையல் குழுவினர் சுடிதார் அணிகின்றனர்.

இதனால் ராதிகா கடுப்பாகிறார். வழக்கம்போல் ராதிகாவின் இந்த ப்ளானையும் முறியடித்த பாக்யா, “வேற எதாச்சும் திட்டம் இருந்தா யோசிங்க” என ராதிகாவிடம் சொல்ல அவரது முகம் கலவரமாகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Baakya wears Churidar Baakiyalakshmi new promo பாக்யா

People looking for online information on Baakiyalakshmi Promo, Baakiyalakshmi today episode will find this news story useful.