www.garudabazaar.com

இயக்குனர் பாலா தயாரிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் எப்போ தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.

B Studio bala presents visethiran planning for November release

பின்னர் சியான் விக்ரமின் மகன் துருவை வைத்து தெலுங்கு அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான வர்மா திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் பல சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பாலாவின் பரதேசி பட நாயகன் அதர்வா முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

B Studio bala presents visethiran planning for November release

இதற்கிடையில் இயக்குனர் பாலா தனது அடுத்த திட்டமாக விசித்திரன் படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார், இதில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கோலிவுட்டில்  இவர் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை படம் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

B Studio bala presents visethiran planning for November release

எம்.பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2018ல் வெளியான மலையாளப் படம் 'ஜோசப்' இன் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இயக்குநர் பாலா இந்தப் படத்தை தனது  B ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்கிறார்.

B Studio bala presents visethiran planning for November release

நடிகர் சுரேஷ் இந்தப் படத்தில் ஒரு முன்னாள் போலிசாக நடிக்கிறார். இந்த படத்தில் சுரேஷ் உடன் பூர்ணா மற்றும் மது ஷாலினி ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முன்னதாக வெளியான டீசர் மற்றும் போஸ்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றது, இப்போது, ​​நவம்பரில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Tags : Bala, Suresh

B Studio bala presents visethiran planning for November release

People looking for online information on Bala, Suresh will find this news story useful.