www.garudabazaar.com

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத... மிரட்டலான கதை களம்...வெளியானது அட்லீயின் 'அந்தகாரம்'..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பல படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லீ. குறுகிய காலகட்டத்தில் மிகப் பெரிய உயரங்களை அடைந்துள்ளார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் தாயரிப்பாளராக தனது அடுத்த படைப்பான 'அந்தகாரம்' படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் இரவு 12 மணிக்கு வெளியாகிவுள்ளது.

atlees production andhagaaram film released அட்லீயின் தயாரிப்பில் அந்தகாரம்

கைதி மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்திருக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ், கீரிடம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்த வினோத் கிஷன், 'ராஜா ராணி'யில் நயன்தாராவின் தோழியாக நடித்த மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் ஆகியோரை வைத்து மிரட்டலான கதை தந்திருக்கின்றனர். சீனுக்கு சீன் பரபரப்பும், பதட்டமும் நம்மை ஒட்டி கொள்கிறது. கதை சொல்லும் பாணியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை. ஏற்கனவே டீசர், டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த படத்தை சுசி சித்தார்த் இயக்க. திரு அமுதன் ஒளிப்பதிவு செய்கிறார். அட்லீயுடன் சேர்ந்து Passion studios இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். இளம் நடிகர்களை வைத்து அட்லீ களம் இறங்கியுள்ள இந்த படைப்பு பாராட்ட கூடிய ஒன்று. அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் இருவருக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டத்தில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பு கூட்டி நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்கள்.

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத... மிரட்டலான கதை களம்...வெளியானது அட்லீயின் 'அந்தகாரம்'..! வீடியோ

atlees production andhagaaram film released அட்லீயின் தயாரிப்பில் அந்தகாரம்

People looking for online information on Andhagaaram, Arjun Das, Atlee will find this news story useful.