www.garudabazaar.com

அடிபொலி! அதர்வா நடிச்ச புது படம்.. பிரபல டிவி சேனல்லயே வருது! வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகிய உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் கண்ணன்.

Atharva thalli pogathey movie to stream in popular tv channel

ஒரே நேரத்தில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏகப்பட்ட படங்களை இயக்கும் இயக்குநர் கண்ணன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவை கலந்து இயக்கிய திரைப்படம் 'தள்ளிப் போகாதே'.

இப்படத்தில் இவர்களுடன் அமிதாஷ், ஆடுகளம் நரேன், வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். முன்னதாக தள்ளிப் போகாதே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அனைத்தையும் கடந்து கடந்த 2021, டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

தற்போது இப்படம் பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் ஒளிபரப்பாகியும் வருகிறது. இந்நிலையில் தான் இப்படம் விரைவில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தற்போது வெளிவந்துள்ளன. 

இதனிடையே மிர்ச்சி சிவா நடிப்பில் காசே தான் கடவுளடா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன் எனும் மலையாள திரைப்படத்தின் தமிழ் பதிப்பு ரீமேக் ஆகிய படங்களும் இயக்குநர் ஆர்.கண்ணனின் கைவசம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Atharva thalli pogathey movie to stream in popular tv channel

People looking for online information on Atharva, R Kannan, Thalli Pogathey, Thalli pogathey movie, Thalli pogathey on prime will find this news story useful.