www.garudabazaar.com

அதர்வா - பிரியா பவானி சங்கர் நடிக்கும் மாஸ் ஆன புதிய படம்! வெளியான பண்டிகை ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுயாதீன திரைப்பட இயக்குனராக தமிழ் சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு  ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.

atharva priya bhavani shankar new movie release update

இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மதுரையை மையமாக வைத்து நடிகர் அதர்வா - நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் 'குருதி ஆட்டம்' படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீ கணேஷ். ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இசையமைப்பாளார் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

atharva priya bhavani shankar new movie release update

atharva priya bhavani shankar new movie release update

இந்த படத்தின் முன்னோட்டம் மற்றும் சிங்கிள் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்தப் படத்தை ராக் போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. 

atharva priya bhavani shankar new movie release update

atharva priya bhavani shankar new movie release update

People looking for online information on Atharva, Priya Bhavani Shankar will find this news story useful.