www.garudabazaar.com

இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்த அசோக் செல்வன்.. வைரல் ஆகும் புகைப்படம்!!.. பின்னணி என்ன??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் அசோக் செல்வன்.

Ashok selvan and nitham oru vaanam crew meet director maniratnam

Also Read | "என் அப்பா ஃப்ரண்ட் மாதிரி, பையன் கிரிக்கெட் பிளேயர்".. ஃபேமிலி குறித்து மனம் திறந்த GVM!!

சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற அசோக் செல்வன், சமீபத்தில் அடுத்தடுத்து நிறைய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இதில், ஓ மை கடவுளே, மன்மத லீலை உள்ளிட்ட திரைப்படங்களும் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்தது. சமீபத்தில், அசோக் செல்வன் நடித்திருந்த 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

Ashok selvan and nitham oru vaanam crew meet director maniratnam

ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நித்தம் ஒரு வானம் திரைப்படம் அதிக கவனம் பெற்றிருந்த நிலையில், பலரும் இந்த திரைப்பட குழுவினரை பாராட்டியும் வருகின்றனர்.

Ashok selvan and nitham oru vaanam crew meet director maniratnam

அந்த வகையில், தற்போது முன்னணி இயக்குனரான மணிரத்னம், நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் குழுவினரை பாராட்டியது குறித்து நடிகர் அசோக் செல்வன் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு அதிகம் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அசோக் செல்வன், "மணிரத்னம் சார்! ❤️, உங்கள் நேரத்தை எங்களுக்கு வழங்கியதற்கும் எங்கள் குழுவை பாராட்டியதற்கும் நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

Ashok selvan and nitham oru vaanam crew meet director maniratnam

நித்தம் ஒரு வானம் படத்தின் இயக்குனர் ரா. கார்த்திக் உள்ளிட்டோரும் இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம், உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக, கமல்ஹாசனின் புதிய படத்தையும் மணிரத்னம் இயக்குவது குறித்து அதிகாரபூர்வ தகவலும் வெளியாகி இருந்தது.

 

Also Read | அடேங்கப்பா, ஒரு பாட்டுக்கு இத்தன கோடியா?.. ஷங்கர் - ராம்சரண் இணையும் RC15.. பிரம்மாண்ட அப்டேட்!!

தொடர்புடைய இணைப்புகள்

Ashok selvan and nitham oru vaanam crew meet director maniratnam

People looking for online information on Ashok Selvan, Maniratnam, Nitham Oru Vaanam will find this news story useful.