www.garudabazaar.com

அப்டி போடு!! ஆர்யாவின் அடுத்த சில படங்கள் பற்றிய மாஸ் அப்டேட்.. இந்த படம் அடுத்த பார்ட் வருதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனைவருக்கும் பிடித்தமான பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ஆர்யா. பல பரிசோதனை முயற்சிகளையும் தம் நடிப்பில் செய்துள்ளவர் ஆர்யா. அந்த வகையில் நான் கடவுள் படத்தைத் தொடர்ந்து ஆர்யாவின் நடிப்பில் முக்கியமான படமாக மகாமுனி திரைப்படம் வெளியானது.

Arya next films with magaamuni and teddy directors update

மௌனகுரு படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் சாந்த குமார் மகாமுனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ஆர்யா மீண்டும் சாந்தகுமாரின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா ஒரு திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியிருந்தது. இதேபோல் சக்தி சவுந்தர்ராஜன் தயாரிப்பிலும் ஆர்யா ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனிடையே ஆர்யா, சயீஷா நடிப்பில் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கிய டெடி திரைப்படம் இன்று மாலை விஜய் டிவியில் மாலை 5 மணிக்கு ஒளிபாப்பாவதாகவும் அதை காணும்படியும் ட்விட்டரில் ஆர்யா மற்றும் சயீஷா தெரிவித்தனர்.

அப்போது அனைவருக்கும் பிடித்த வகையில் மீண்டும் டெடி-2 திரைப்படத்துக்கான செம்மயான ஸ்கிரிப்டுடன் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன் வருவார் என நம்புவதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Arya next films with magaamuni and teddy directors update

People looking for online information on Arya, Vijay Television will find this news story useful.