Udanprape others
www.garudabazaar.com

"கை..கை.".. ஆபத்தின் விளிம்பில் போட்டியாளர்.. அலறி ஓடி ‘ஆக்‌ஷனில்’ இறங்கிய அர்ஜூன்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான ரியாலிட்டி ஷோ, ‘சர்வைவர்’.

arjun saves nandha rope task survivor tamil task

திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வழிநடத்தி தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி, நாளும் நாளும் புதிய கஷ்டமான டாஸ்க்குகளுடனும் திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர்கள் என்பதால் மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பெரும் வரவேற்பும் இருக்கிறது.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் டாஸ்க்குகள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் இருப்பதாலேயே, இந்நிகழ்ச்சியை பலரும் சீரியஸாய் பார்க்க தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் காடர்கள் மற்றும் வேடர்கள் அணிகள் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியாளர்கள் போட்டிகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த வாரங்களில் எலிமினேஷன் நடந்ததை அடுத்து, இந்த வாரமும் அடுத்த எலிமினேஷன் புரோசஸ் தயாராகி வருகிறது. இதனிடையே ஒரு பக்கம் ஐஸ்வர்யா இன்னொரு பக்கம் வனேசா என இருவரும் கடலுக்கு நடுவே இருக்கும் ஒரு தொங்கும் ஊஞ்சலில் அமர்ந்திருக்கின்றனர். அதன் நைலான் கயிற்றை அவரவர் அணிக்குரியவர்கள் கூட்டாக சேர்ந்து பிடித்திருக்கின்றனர் .

குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு, கயிறை பிடித்திருக்கும் போட்டியாளர்கள் ஒருவர் ஒருவராக விலகிவிட, கடைசியில் நந்தா ஒருபுறமும், உமாபதி ஒருபுறமும் கயிறுகளை பிடித்திருக்கின்றனர். இந்த இரு அணிகளில் யார் வெல்லப் போகிறார்கள்? என்பது சஸ்பென்ஸாக போகும்.

இந்த நிலையில் நந்தா ஏற்கனவே சிரமப்பட்டு, அந்த கயிறைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த கயிறு விட்டால் கையை பதம் பார்த்துவிடும் போலிருக்கிறது. ஒரு கட்டத்தில் பேலன்ஸ் தவறிவிட, உடனே அர்ஜுன் கை.. கை என்று கூக்குரலிட்டு பார்க்கிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து அருகில் யாரும் இல்லாதது போல் தெரிகிறது.

உடனே அர்ஜுனே களத்தில் இறங்கி, நந்தாவை காப்பாற்றுவதற்கு அலறி ஓடி வருகிறார். இந்த காட்சிகள் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகின்றன. தொடர்ந்து இந்த நிகழ்ச்சி அதற்குரிய சீரியஸான மற்றும் விறுவிறுப்பான டாஸ்க்குகளால் ஒரு பக்காவான நிகழ்ச்சியாக உருவெடுத்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

arjun saves nandha rope task survivor tamil task

People looking for online information on Arjun, Realityshow, Survivor, SurvivorTamil, Trending, ZeeTamil will find this news story useful.