தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா திருமணம் பற்றியும் தன் மீது சுற்றி வரும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாகவும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “ஏன் எனது திருமணத்தை பற்றி ரசிகர்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர், தொடர்ந்து வதந்திகளை பரப்புகின்றனர் என தெரியவில்லை. நான் 2018ல் ஒருவரை காதலித்தேன். ஆனால் நாங்கள் பிரிந்துவிட்டோம். அது மிகவும் மரியாதைக்குரிய உறவு என்பதால் அந்த நபரை பற்றி என்னால் சொல்ல முடியாது.
பிரபாஸை 25 வருடங்களாக தெரியும். மிக முக்கியமான நண்பர்களில் அவரும் ஒருவர். எங்கள் இருவரையும் இணைத்து பேசும் அளவிற்கு எங்களுக்குள் காதல் ஏதும் இல்லை.
என்னுடைய 20 வயதிலிருந்தே எனது பெற்றோர் என்னை திருமணம் செய்யுமாறு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வதந்திகள் எதுவும் எனது குடும்பத்தையும் பெற்றோரையும் பாதிக்கவில்லை. என்னை அவர்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்” என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.