www.garudabazaar.com

இளையராஜாவின் VINTAGE பாட்டுக்கு க்யூட் ஸ்டெப் போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. சூப்பர் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Anupama Parameswaran Latest Instagram Reels video

Also Read | ‘சுப்ரமணியபுரம்’ 14 வருஷம்.. ஜேம்ஸ் வசந்தன் நன்றி!!.. கூடவே வைரலாகும் பாடல் பின்னணி.!

மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன்.

பின்னர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் 'தேஜ் ஐ லவ் யூ', 'உன்னடி ஒகடே சிந்தகி', ' ஹலோ குரு ப்ரோமோ' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக தமிழில் அனுபமா அதர்வாவுடன் இணைந்து நடித்த ‘தள்ளி போகாதே’ படம் சமீபத்தில் வெளியானது.

Anupama Parameswaran Latest Instagram Reels video

அனுபமா  எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதனால் தன்னுடைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது வழக்கம். இந்த லாக் டவுன் சமயத்தில் படு மாடர்ன் உடைகளில் அனுபமா தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

தெலுங்கில் வரும் ஜூலை 22 அன்று திரையரங்குகளில் ரிலீசாகும் கார்த்திகேயா -2 படத்தின் ரிலீஸை ஒட்டி சில நாட்களுக்கு முன் ப்ரோமோஷன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.

Anupama Parameswaran Latest Instagram Reels video

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இளையராஜா இசையமைத்த ஆட்டோ ராஜா படத்தில் இடம்பெற்ற "சங்கத்தில் பாடாத கவிதை" பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இளம் சிவப்பு நிற உடையில் இரட்டை ஜடை போட்டு இந்த வீடியோவில் அனுபமா பரமேஸ்வரன் தோன்றியுள்ளார்

Also Read | அஜித் நடிக்கும் AK61.. இணையத்தை கலக்கும் BTS போட்டோ! யாரெல்லாம் இருக்கானு பாருங்க

இளையராஜாவின் VINTAGE பாட்டுக்கு க்யூட் ஸ்டெப் போட்ட அனுபமா பரமேஸ்வரன்.. சூப்பர் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Anupama Parameswaran Latest Instagram Reels video

People looking for online information on Anupama Parameswaran, Anupama Parameswaran Latest Instagram Reels will find this news story useful.