அட..! ஆங்கர் டிடி பேசுறதுல மட்டுமில்ல, பாடுறதுலயும் கெத்துதான்.! தெறி க்யூட் வீடியோ.
முகப்பு > சினிமா செய்திகள்ஆங்கர் திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
![ஆங்கர் டிடி பாடிய ஸ்பானிஷ் பாடல் | anchor dd aka divyadharshini sings money hiest song ஆங்கர் டிடி பாடிய ஸ்பானிஷ் பாடல் | anchor dd aka divyadharshini sings money hiest song](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/anchor-dd-aka-divyadharshini-sings-money-hiest-song-news-1.jpg)
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் இவரது சரவெடியான பேச்சுக்கு என்று தனி ரசிகர்கள் உண்டு. மேலும் காபி வித் டிடி என்கிற நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்களை பேட்டி எடுத்து, இவர் தமிழகமெங்கும் பிரபலமானார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அண்மையில் வெளியாகி உலகம் முழுவதிலும் மிகப்பெரிய ஹிட் அடித்தது Money Hiest எனும் வெப் தொடர். இத்தொடரில் வரும் Bella Ciao என்கிற ஸ்பானிஷ் பாடலை அவர் அழகாக பாடியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும் வெப் தொடரின் மொத்த குழுவுக்கும் அவர பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். டிடியின் இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.