RRR Others USA
www.garudabazaar.com

கர்ப்பமான வயிறுடன் நம்ம DD... வைரலான வளைகாப்பு ஃபோட்டோ.. சுவாரஸ்ய பின்னணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி கர்ப்பமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anchor DD Divya Dharshini Pregnant Image Went Viral

விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுபவர். இவரின் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

Anchor DD Divya Dharshini Pregnant Image Went Viral

பின் திருமணமான சில நாட்களில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். ஏற்கனவே பா. பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ள டிடி தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுந்த சி இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த சுந்தர் சி திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. சம்யுக்தா சண்முகநாதன். ஏற்கனவே, டிடி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தப் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் பிறகு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

Anchor DD Divya Dharshini Pregnant Image Went Viral

இந்நிலையில் டிடியின் கர்ப்பமான புகைப்படம் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் நடிக்கும்  புதிய படத்தில் டிடி கர்ப்பமான வயிறுடன் வளைகாப்பு போடும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் BTS புகைப்படங்கள் தான் தற்போது நடிகர் விச்சு மூலம் வெளியாகி உள்ளன.

Anchor DD Divya Dharshini Pregnant Image Went Viral

 

தொடர்புடைய இணைப்புகள்

Anchor DD Divya Dharshini Pregnant Image Went Viral

People looking for online information on DD, Dhivya Dharshini, Divya Dharshini will find this news story useful.