ரொம்ப அதிகப்பிரசிங்கத்தனம் பண்ண வேணாம்! குஷ்பு பதிலடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு கமல், மாதவன், கிரண் நடிப்பில் வெளியான படம் அன்பே சிவம். இப்படம் வெளியான சமயத்தில் விமர்சனரீதியாக நல்ல பெயரைப் பெற்றாலும், கமர்ஷியலாக ஹிட் அடிக்கவில்லை.

Anbe sivam is not a hit movie commercially tweets khusboo sundar

அன்பே சிவம் படம் ஐஎம்டிபி-யில் அதிக ரேட்டிங் பெற்ற தமிழ்ப்படம் என்று கமல் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அந்தப் பதிவுக்கு குஷ்பு பதில் ட்வீட் போட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டது, ‘இந்தப் படம் வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும், என் கணவர் இரண்டு வருடம் வீட்டில் சும்மா இருந்திருக்கத் தேவை இருந்திருக்காது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த பதிலைப் பார்த்து கமல் ரசிகர்கள் பலரும் குஷ்புவை ட்ரால் செய்யத் தொடங்கினர். ஒருவர் வின்னர் படத்தை குறிப்பிட்டு அதன் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் தகவல் கொடுக்க, குஷ்பு அதற்கு பதில் ட்விட்டினார். அதில் அவர் கூறியது, ‘வின்னர் படம் 2001-ம் ஆண்டு வெளியானது.

அன்பே சிவம் தோல்வி அடைந்ததால் சொந்தமாக கிரி படத்தை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பே சிவம் 2003 ஜனவரியிலும், கிரி அக்டோபர் 2004-ம் ஆண்டிலும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள். ஸோ ரொம்ப அதிகபிரசிங்கத்தனம் பண்ண வேண்டாம் தம்பி....அறிவாளி நினைச்சுட்டு முட்டாளா தெரியறீங்க’ என்று பதிவிட்டிருந்தார் குஷ்பு

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Anbe sivam is not a hit movie commercially tweets khusboo sundar

People looking for online information on Kamal Haasan, Khusbboo Sundar will find this news story useful.