www.garudabazaar.com

'ஆனந்தம் அபிராமி'ய நினைவிருக்கா.? இவங்கதான் இந்த இளம் நடிகரின் அம்மாவா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் சன் டிவியிலும் பிரபல இலங்கை தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான சீரியல் ஆனந்தம்.

anandham serial Brinda Das is Kishen Das mom

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Raja Rani 2 : விலகிய ரியா – புது சந்தியாவாக பிரபல ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் மாஸ் எண்ட்ரி.!   

பிரபல தமிழ் முன்னணி நடிகை சுகன்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியலில் சுகன்யா, கமலேஷ்,டெல்லி குமார், விஜய் ஆதிராஜ், சதீஷ்குமார், வந்தனா, மோகன் வி ராம், ஆடிட்டர் ஸ்ரீதர், எஸ்.கவிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்

தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் பிறகு மீண்டும் 2014 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2023 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்த சீரியலில் மதன் கதாபாத்திரத்தின் மனைவி அபிராமி என்கிற அபிராமி தேவி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிருந்தா தாஸ்.

கல்லூரி காலத்தில் கிளாசிக்கல் டான்ஸில் புகழ்பெற்ற இவரது திறமையை பார்த்து டிடி மெட்ரோ சேனலில் நம் குடும்பம் என்கிற தொடரில் இவருக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ஆனந்தம் சீரியலில் நடித்த இவர் மிகவும் புகழ் பெற்றார். கிட்டத்தட்ட சொந்த பெயரையே மறக்கும் அளவுக்கு, அழுத்தமான இந்த கதாபாத்திரத்தின் பெயரான அபிராமி என்கிற பெயர் நிலைத்ததாக பல சமயங்களில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

anandham serial Brinda Das is Kishen Das mom

Images are subject to © copyright to their respective owners.

அதன் பிறகு நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த பிருந்தா தாஸ் தனிப்பட்ட வாழ்க்கையில் பிஸியாகி இருக்கிறார். எனினும் அபிராமி போன்று அழுத்தமான கதாபாத்திரங்கள் வரும்பொழுது நிச்சயமாக நடிக்கலாம் என்றும் இடையில் தெரிவித்திருந்தார். இவருடைய மகன் கிஷன் தாஸ் பிரபல இளம் நடிகராக திரைத்துறையில் வலம் வருகிறார். இவர் வேறு யாரும் அல்ல அண்மையில் வெளிவந்த "முதல் நீ முடிவும் நீ" என்கிற திரைப்படத்தின் ஹீரோதான்.‌

தமிழ்நாட்டில், சென்னையில் 90களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நாஸ்டால்ஜியா மற்றும் அவர்களின் தற்கால வாழ்க்கை வரை பயணிக்கும் இடைப்பட்ட கால ஃபேண்டஸி டைம் ட்ராவல் கதை தான் இக்கதை.

anandham serial Brinda Das is Kishen Das mom

Images are subject to © copyright to their respective owners.

சென்னை இளைஞர்கள் மற்றும் 80,90களின் இளைஞர்களிடையேயும் குடும்பப் பார்வையாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தை தர்புகா சிவா எழுதி இயக்கி இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “ஞானவேல் ராஜா - சிவா - சூர்யா 3 பேரும் டெட்லி COMBO”.. Suriya42 குறித்து தனஞ்செயன்.!

anandham serial Brinda Das is Kishen Das mom

People looking for online information on Anandham serial Brinda Das, Kishan Das will find this news story useful.