www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் படத்துக்கே ப்ரொமோஷன் தேவைப்படுது! - விமல் பட விழாவில் பேசிய அமீர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சரவண சக்தி இயக்கத்தில் விமல் நடித்துள்ள படம் குலசாமி. இந்த படத்திற்கு மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.

Ameer Speech in kulasami movie press meet starring Vimal

இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவே பிரபல தீரன் பட புகழ் நிஜ போலீஸ் கேரக்டரான, முன்னாள் போலீஸ் அதிகாரி ஜாங்கிட் நடித்துள்ளார்.  விமல், தன்யா ஹோப் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், இயக்குநர் சரவண சக்தியின் மகன் சூர்யா வில்லன் வேடத்தில் அறிமுகமாகியுள்ளார்.

வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ  தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். மேலும்,  இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் April 21 2023 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்பட விழாவில் இயக்குநர் அமீர் பேசும்போது, “இயக்குநர் சரவண சக்தி என்னுடைய நண்பர்,  நான் நடிக்கும் ஒரு படத்தில் உடன் நடிக்கும் சகோதரர். ஒரு இயக்குநர் நடிகராகும் போது சில சங்கடங்கள் இருக்கும் அதை தீர்த்து வைத்தது சரவண சக்தியும், அண்ணாச்சியும் தான். என்னை மிக மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்கள். சரவண சக்தி மிகச்சிறந்த திறமையாளர்.

Ameer Speech in kulasami movie press meet starring Vimal

இன்று பொன்னியின் செல்வன் படத்தையே புரமோசன் மூலம் தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சுற்றி சுற்றி புரமோசன் செய்கிறார்கள் இன்று சினிமாவின் நிலை இதுதான். அப்படி இருக்கும் போது, இந்தப்படத்தின் நாயகன் நாயகி இங்கு இருந்திருக்க வேண்டும்.  அவர்கள் வராதது  எனக்கு வருத்தமே. அந்தக்குறையை ஜாங்கிட் சார் வந்திருந்து நிவர்த்தி செய்துள்ளார். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்”. என பேசியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ameer Speech in kulasami movie press meet starring Vimal

People looking for online information on Ameer, Kulasamy, Vemal will find this news story useful.