MKS Others
www.garudabazaar.com

தடைகளை தாண்டி மீண்டும் துவங்கும் துப்பறிவாளன் -2! வெளியான புதிய லுக் போஸ்டர்! சரவெடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017 ஆம் ஆண்டு வெளியான ஹுப்பறிவாளன் படத்தை விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கி இருந்தார். 

All set for the recce of actor vishal Thupparivaalan part 2

கனியன் பூங்குன்றன் எனும் துப்பறியும் நிபுணராக விஷால் நடித்திருந்தார். பிரசன்னா, அனு இம்மானுவேல், பாக்யராஜ், சிம்ரன், வினய், ஆண்ட்ரியா மேலும் பலர் நடித்திருந்தனர். அரோல் கரோலி இசையமைத்திருந்தார். சராசரி வெற்றியைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி விஷால் தயாரித்து நடிப்பதாக இருந்தது. 

All set for the recce of actor vishal Thupparivaalan part 2

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. இந்தப் படத்திலும் முதல் பாகம் போலவே பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்தார். இசைஞானி இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வலிமை பட ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆஷ்யா, விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். 

All set for the recce of actor vishal Thupparivaalan part 2

முதல் கட்ட படப்பிடிப்பு 2020 பிப்ரவரி வாக்கில் நடக்கும் போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து இயக்குனர் மிஷ்கின் விலகினார். இதையடுத்து மிஷ்கினுக்கு பதில் விஷால் இயக்குனரானார். கொரோனா காரணமாகவும், விஷால் வேறு படங்களில் நடிக்க கமிட் ஆனதாலும் இந்த படத்துடைய படப்பிடிப்பு நடைபெறாமல் போனது. 

All set for the recce of actor vishal Thupparivaalan part 2

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 2022ல் இருந்து துவங்கும் என்றும், அதற்கு முன் ஷூட்டிங் நடைபெறும் இடங்களை தேர்வு செய்யும் பணி இலண்டனில் வரும் ஜனவரி 2022ல் துவங்கும் என்றும் விஷால் ஃட்விட்டரில் அறிவித்துள்ளார். 

All set for the recce of actor vishal Thupparivaalan part 2

People looking for online information on Ilaiyaraaja, Thupparaivalan2, Vishaal will find this news story useful.