www.garudabazaar.com

எதிர்பார்ப்பில் இருந்த 'வலிமை' வினியோகஸ்தர்கள்! கடைசில இப்படி ஆயிடுச்சே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வலிமை படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்தது. ஆனால் வினியோகஸ்த்ர்கள் கணிப்பு பொய்த்து விட்டது.

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

வலிமை பொங்கல்

'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு, ஜனவரி 13  ஆம் தேதி பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படம், தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீசாகிறது என போனிகபூர் டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் போடப்பட்டுள்ளது. மேலும் தியேட்டரில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியாக மீண்டும் பொங்கல் ஜனவரி 13 ஆம் தேதியை கேரளா, மலேசியா, ஜெர்மனி, திருச்சி, வட தென் ஆற்காடு பகுதி வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் சற்றுமுன் போனிகபூர் பட ரிலீசை ஒத்திவைத்துள்ளார்.

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

வலிமை திருவிழா

வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.  மதுரை மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

வலிமை டிரெய்லர்

வலிமை படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர். வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது.

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

வலிமை படக்குழு

வலிமை படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. 

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Release Update from Distributors

People looking for online information on போனி கபூர், வலிமை, Boney kapoor, Pan India, Valimai Movie, Valimai Pongal, Valimai Release will find this news story useful.