www.garudabazaar.com
iTechUS

'BLOCKBUSTER'.. துணிவு படத்தின் மிரட்டலான மேக்கிங் BTS வீடியோ.. தீய்யா இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

Ajith Kumar AK H Vinoth Thunivu Movie Making BTS Video Released

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் துணிவு படத்தின் படக்குழு தற்போது படத்தின்  உருவாக்க BTS வீடியோவை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி சுடும் காட்சிகள்,  Mocobot கேமரா பயன்படுத்தி எடுத்த காட்சிகள், ரியலாக வெடிக்க வைக்கப்பட்ட வெடி குண்டுகள் அடங்கிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அடங்கி உள்ளன. இந்த வீடியோவில் இயக்குனர் வினோத், ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஆகியோருடன் நடிகர் அஜித் கலந்துரையாடல் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. 

Ajith Kumar AK H Vinoth Thunivu Movie Making BTS Video Released

I Feel I Feel I Feel Tonight... I Need A Money Money Money Tonight. No Guts No Glory No Guts No Glory என்ற பாடலும் பின்னணி இசையில் இடம் பெற்றுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK H Vinoth Thunivu Movie Making BTS Video Released

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu BTS Making Video will find this news story useful.