ஐஸ்வர்யா ராஜேஷின் ‘திட்டம் இரண்டு’ படம்.. ‘இந்த’ பிரபல ஓடிடி சேனலில் ரிலீஸ் ஆகிறதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

Aishwarya Rajesh Thittam Irandu Plan B movie OTT release

தற்போது அவர், பிரபலமான மலையாளப் படமான ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படத்தின் ரீ-மேக்கில் நடித்து வருகிறார். ஓடிடி வெளியீட்டுக்காக தயாராகும் இந்த திரைப்படத்தை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘Plan B’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘திட்டம் இரண்டு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த வருடம் விஜய் சேதுபதி, தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்திலான இந்த படம் மிஸ்ட்ரி த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு சதீஷ் ரகுநாதன இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்துக்கான நிறைவுப் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் Sony Liv ஓடிடியில் வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், Yours Shamefully மற்றும் Yours Shamefully 2.5 ஆகிய குறும்படங்களின் மூலம் புகழ்பெற்றவர். சில வருடம் முன்பு அசார் நடிப்பில் வெளியான, ‘ஏண்டா தலையில எண்ணெய் வெக்கல’ என்கிற திரைப்படத்தையும் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார்.

ALSO READ: அதிர்ச்சி! 'சூப்பர் மேன்' படங்களின் பிதாமகன் 'ரிச்சர்ட் டோனர்' திடீர் மரணம்!

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh Thittam Irandu Plan B movie OTT release

People looking for online information on Aishwarya Rajesh, Thittam Irandu, Vignesh Karthik will find this news story useful.