பிரபல நடிகைக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில்.... தொடரும் சோகம் - ரசிகர்கள் அதிர்ச்சி !
முகப்பு > சினிமா செய்திகள்நடிகையும் கடந்த 2006 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் வேர்ல்டு இந்தியா பட்டம் வென்றவருமான நடாஷா சூரி தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ஒரு நேர்காணலில், ''கடந்த 6 நாட்களுக்கு முன்பு ஒரு அவசர வேலையின் காரணமாக புனே சென்றேன். பிறகு திரும்பி வந்த போது, எனக்கு காய்ச்சல், தொண்டை கரகரப்பு, சோர்வு ஏற்பட்டது.

மூன்று நாட்களுக்கு முன்பு டெஸ்ட் செய்த போது எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் தற்போது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு இருக்கிறேன். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்கிறேன். என்னுடன் வசிக்கும் பாட்டி மற்றும் சகோதரி தற்போது கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது சகோதரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவர் தனது சகோதரியை குறிப்பிட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வரும் பயணத்தில் என்னுடன் இரு. இணைந்தே வலிமையாக இருப்போம். கொரோனா பாசிட்டிவ் மற்றும் மனதும் பாசிட்டிவ் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Popular Actress Tested Positive For Coronavirus Ft Natasha Suri | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை நடாஷா சூரி
- Popular Actress And Former Femina Miss World India Has Tested Positive For Covid 19 Ft Natasha Suri
- Natasha Suri Gets Injured As Bungee Jumping Goes Wrong
- Natasha Suri Meets With An Accident Tamil Cinema News