'அமர காவியம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் அவர் இணைந்து நடித்த 'இன்று நேற்று நாளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து சசிக்குமாருடன் 'வெற்றிவேல்', விஜய் ஆண்டனியுடன் 'எமன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து, பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் இவருக்கும் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் அஸ்வின் என்பவருக்கும் சமீபத்தில் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாம். இதனையடுத்து அவர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது வைரலாகி வருகிறது. ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகை மியா ஜார்ஜின் நிச்சயதார்த்த ஃபோட்டோஸ் வைரல் - பிரபலங்கள் வாழ்த்து வீடியோ