www.garudabazaar.com

காதல் சந்தியா ரீ-என்ட்ரி.. அந்த பிரபலமான சீரியலில் அறிமுகமாகிறார்.! முழு விவரமும் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காதல் சந்தியா, தற்போது ஒரு பிரபலமான சீரியலில் நடிக்கும் ப்ரொமோ வெளியாகியுள்ளது. 

சீரியலில் அறிமுகமாகும் காதல் சந்தியா | Actress kaadhal Sandhya to act in this popular tamil serial

தமிழ் சினிமாவில் காதல் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் சந்தியா. இதை தொடர்ந்து இவர் டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர், 2015-ஆம் திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு, இவர் நடிப்பதில் இருந்து ஒதுங்கி கொண்டார். 

சீரியலில் அறிமுகமாகும் காதல் சந்தியா | Actress kaadhal Sandhya to act in this popular tamil serial

இந்நிலையில் காதல் சந்தியா தற்போது பிரபலமான சீரியலில் நடிக்கும் புதிய ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சஞ்சீவ், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கண்மணி சீரியலில், காதல் சந்தியா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அண்மையில் நடிகை யாஷிகாவும் சின்னத்திரை சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 

 

சீரியலில் அறிமுகமாகும் காதல் சந்தியா | Actress kaadhal Sandhya to act in this popular tamil serial

People looking for online information on Kaadhal Sandhya, Kanmani Serial, Sandhya will find this news story useful.