www.garudabazaar.com

5 வருசத்துக்கு அப்றம் மாஸ் என்ட்ரி.. பொது மேடையில் தோன்றிய பாவனா‌.. ஆர்ப்பரித்த அரங்கம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேரள மாநிலத்தில், தற்போது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. இதனையடுத்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, நடிகை ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளது தான், ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

actress bhavana surprise entry in iffk get standing ovation

கடந்த 2017 ஆம் ஆண்டு, நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம் காரணமாக, சுமார் ஐந்து ஆண்டுகள் மலையாள சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார் நடிகை பாவனா.

அது மட்டுமில்லாமல், எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கூட பாவனா கலந்து கொள்ளவில்லை.

பிரபலங்கள் பாராட்டு

இதனையடுத்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக, புதிய மலையாள திரைப்படம் ஒன்றில் நடிகை பாவனா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு, மலையாள சினிமாவில் பாவனா தோன்றவுள்ளதால், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தனர்.

மாஸ் என்ட்ரி

இந்நிலையில், கேரள மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்கு, யாரும் எதிர்பாராத வகையில், நடிகை பாவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில், மாஸாக ஒரு என்ட்ரியை பாவனா கொடுக்கவே, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என குழுமியிருந்த மொத்த அரங்கும், ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டது.

actress bhavana surprise entry in iffk get standing ovation

திரைப்பட விழா

கேரளாவில், 26 ஆவது IFFK (International Film Festival Kerala), சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இதில், பாவனா வருவதைக் கண்டதும், ரசிகர்கள் தொடர்ந்து ஆரவாரம் செய்து, மெர்சலான ஒரு வரவேற்பை அவருக்கு கொடுத்தனர். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனா, குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதே போல, கேரளாவின் கலாசாரத் துறை அமைச்சர் ஷாஜி செரியன், "கேரளாவின் ரோல் மாடல் நீங்கள்" என பாவனாவை பாராட்டி, பேசி இருந்தார்.

பாராட்டிய பார்வதி

தொடர்ந்து மலையாள நடிகை பார்வதியும், பாவனா நிகழ்ச்சியி கலந்து கொண்ட வீடியோவை பகிர்ந்து, "வெல்கம் பேக் பாவனா. இது உங்களுக்கான இடம். உங்களுடைய கதை. உங்களுடையது" என குறிப்பிட்டுள்ளார்.

actress bhavana surprise entry in iffk get standing ovation

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress bhavana surprise entry in iffk get standing ovation

People looking for online information on Bhavana, Entry, Fans, Film festival, IFFK, International Film Festival Kerala, Kerala, Malayalam Cinema will find this news story useful.