www.garudabazaar.com

LATEST : யோகிபாபு வெளியிட்ட வைரல் வீடியோ.. ''என்னை வைத்து இப்படி மோசடி நடக்குது..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகிபாபு வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் யோகிபாபு பரபரப்பு வீடியோ | Actor Yogi babu releases a video requesting producers and directors

தமிழ்  சினிமாவில்  காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகிபாபு. சிறு சிறு நகைச்சுவை வேடங்களில் தனது பயணத்தை தொடங்கிய இவர், தற்போது ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களில் தனது காமெடியில் கலக்கி  வருகிறார். மேலும் இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இவர் திருமணம் செய்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஹிட் அடித்தது.

நடிகர் யோகிபாபு பரபரப்பு வீடியோ | Actor Yogi babu releases a video requesting producers and directors

இந்நிலையில் தற்போது யோகிபாபு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் தன்னை ஹீரோ என்பது போல காட்டி விளம்பரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். ''ஒரு சில காட்சிகளில் மட்டுமே நான் நடித்த சில படங்களின் போஸ்டர்களின் என்னை முதன்மையாக கொண்டு விளம்பரப்படுத்துகின்றனர். இதனால், தியேட்டர் ஓனர்கள், ரசிகர்கள் என பலரும் ஏமாற்றம் அடைகின்றனர். அவர்களை மோசடி செய்வது தவறு. அதனால், இனிமேல் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்காத படங்களின் விளம்பர போஸ்டர்களில், என்னை ஹீரோ போல விளம்பரப்படுத்த வேண்டாம்'' என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார். 

 

LATEST : யோகிபாபு வெளியிட்ட வைரல் வீடியோ.. ''என்னை வைத்து இப்படி மோசடி நடக்குது..'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் யோகிபாபு பரபரப்பு வீடியோ | Actor Yogi babu releases a video requesting producers and directors

People looking for online information on Latest Video, Producers, Yogi Babu will find this news story useful.