www.garudabazaar.com

வந்தாச்சு "விஷால்" நடிக்கும் #vishal31 படத்தின் அடுத்த அப்டேட்.. வெளியான "மாஸ்" அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் விஷால்31.

actor Vishal vishal31 shooting final scheduled update

இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் 50 நாட்கள் நடைபெற்றது. ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் 10 நாட்கள் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி நடைபெறுவதாக அடுத்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகிறது. படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ், Black sheep தீப்தி  உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார். அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை அமைக்கின்றனர். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார். பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்றுகிறார்.

இதனிடையே விஷால் நடிப்பில் ஆர்யா இணைந்து நடிக்கும் “எதிரி” படத்தின் வெளியீட்டு பணிகள் நடந்து வருகிறது.

Also Read: “ஹாரர், திரில்லர் வேணாம்னு முடிவு பண்ணோம்!”.. சித்தார்த்தை இயக்கிய நவரசா இயக்குநர்!

தொடர்புடைய இணைப்புகள்

actor Vishal vishal31 shooting final scheduled update

People looking for online information on Vishal, Vishal31, Yuvan Shankar Raja will find this news story useful.