நீண்டநாள் காதலியை கரம்பிடிக்கும் 'பிரபலம்'... உறுதி செய்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் வருண் தவான் தன்னுடைய காதலி நடாஷா தலாலை வருகின்ற 24-ம் தேதி மணக்க உள்ளார்.

Actor Varun Dhawan to tie the Knot Natasha Dalal on Jan 24th

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் வழியாக பாலிவுட்டில் அறிமுகமான வருண் தவான் தொடர்ந்து பட்லாபூர், ஏபிசிடி 2, தில்வாலே, ஸ்ட்ரீட் டான்ஸர் என பல்வேறு ஹிட் படங்களை அளித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் தன்னுடைய நீண்டநாள் காதலி நடாஷாவை வருண் திருமணம் செய்யவிருக்கிறாராம்.

இந்த தகவலை வருணின் சித்தப்பாவும், நடிகருமான அனில் தவான் உறுதிப்படுத்தி இருக்கிறார். தெற்கு மும்பையில் உள்ள அலிபாக்கில் வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மிகக்குறைந்த நபர்களே கலந்து கொள்ள இருக்கிறார்களாம். வருண் தவான் தற்போது ஜக் ஜக் ஜீயோ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

Actor Varun Dhawan to tie the Knot Natasha Dalal on Jan 24th

People looking for online information on Varun Dhawan will find this news story useful.