பிரதமர் மோடிக்கு கமல் எழுதிய கடிதம் - பிரபல நடிகர் கிண்டல்.! - ''இத மோடி படிக்குறதுக்குள்ள..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமலின் கடிதம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கமன்ட் அடித்துள்ளார். 

கமல் கடிதம் குறித்து எஸ்.வி.சேகர் கருத்து | actor sve.shekar comments on kamal's letter to pm modi regarding coronavirus crisis

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் கமல் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர், கமலின் கடிதம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமன்ட் அடித்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''இவ்வளவு பெர்ர்ரிய லெட்டரை மோடி அவர்கள் படிக்கிறத்துக்குள்ள கொரானாவே உலகத்தை விட்டு போயிடும்'' என அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனிடையே கமல் தனது கடிதத்தில் பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு, 9 மணிக்கு விளக்கேற்றுவது உள்ளிட்ட யோசனைகளை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

Entertainment sub editor