www.garudabazaar.com

Breaking: பிரபல பாடகர், நடிகர் மாணிக்க விநாயகம் மரணம்! 2021-ல் திரைத்துறையில் மற்றுமொரு பேரிழப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் திடீர் மரணம் அடைந்திருக்கும் தகவல் திரைத்துறையை மீளா சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

actor singer manikka vinayagam passes away மாணிக்க விநாயகம்

பாடகராக மாணிக்க விநாயகம், விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில், ‘கட்டு கட்டு கீர கட்டு’, சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படத்தில், ‘அறுபது ஆயிடுச்சு’ பாடல், விக்ரம் நடித்த ‘தூள்’ திரைப்படத்தில், ‘அருவா மீசை கொடுவா பார்வை’, விக்ரம் நடித்த தில் திரைப்படத்தில், ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ உள்ளிட்ட பல ஹிட் திரைப்படப் பாடல்களை மாணிக்க விநாயகம் பாடியிருக்கிறார்.

2021-ஆம், ஆண்டில் திரைத்துறையில், பல முக்கிய பிரபலங்கள் மரணமடைந்து இருக்கின்றனர். கடந்த 2020-ஆம் வருடத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து ஆட்டோகிராப் பட புகழ் பாடகர் கோமன் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார். இதேபோல், ‘என்னடி முனியம்மா’ பாடல் புகழ் பாடகர் டி.கே.எஸ்.நடராஜன் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் உயிரிழந்தார்.

actor singer manikka vinayagam passes away மாணிக்க விநாயகம்

இவர்களின் வரிசையில் தற்போது பாடகர் மற்றும் நடிகர் மாணிக்க விநாயகம் உயிரிழந்திருப்பது திரைத்துறைக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி ஆகும் பெரும் இழப்பாகும் இருக்கிறது மாணிக்க விநாயகத்தின் மரணத்திற்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor singer manikka vinayagam passes away மாணிக்க விநாயகம்

People looking for online information on Actor manikka vinayagam, Actor singer manikka vinayagam, மாணிக்க விநாயகம் மரணம், Singer manikka vinayagam, Singer manikka vinayagam dead, Singer manikka vinayagam death, Singer manikka vinayagam dies, Singer manikka vinayagam passed away, Singer manikka vinayagam passes away, Tamil cinema news, Tamil daily news, Tamil latest news will find this news story useful.