www.garudabazaar.com

''விஷயத்தை கேள்விப்பட்டு...'' - பிரபல கிரிக்கெட் வீரரின் மறைவிற்கு ஆர்ஜே பாலாஜி இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் நேற்று (24/09/2020) மும்பையில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது திடீர் மறைவு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

actor RJ Balaji mourns the demise of cricketer Dean Jones | பிரபல கிரிக்கெட் வீரரின் மறைவிற்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி இரங்கல்

டீன் ஜோன்ஸ் குறித்த தங்கள் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். சிஎஸ்கே வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''கிரிக்கெட்டிற்கு பெரும் இழப்பு, சேப்பாக்கம் என்றும் நினைவில் கொள்ளும்'' என்று தெரிவித்திருந்தது.

actor RJ Balaji mourns the demise of cricketer Dean Jones | பிரபல கிரிக்கெட் வீரரின் மறைவிற்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி இரங்கல்

இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி, ''டீன் ஜோன்ஸின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். முந்தைய இரவு நானும் அவரும் ஒரே காரில் பயணித்தோம். இன்னும் என்னால் அவர் மறைவை நம்ப முடியவில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actor RJ Balaji mourns the demise of cricketer Dean Jones | பிரபல கிரிக்கெட் வீரரின் மறைவிற்கு நடிகர் ஆர்ஜே பாலாஜி இரங்கல்

People looking for online information on Dean Jones, IPL, RJ Balaji will find this news story useful.