www.garudabazaar.com

தனது குழந்தையின் முகத்தை காட்டிய ரியோ... அப்படியே அம்மா ஜாடை... வாழ்த்தும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் நடிகர் ரியோ. அவருக்கு அப்போதே எக்கச்சக்கமான ரசிகர்கள் உண்டு. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் அறிமுகமானார். அந்த சீரியலிலும் கவனத்தை ஈர்த்தவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக ஜோடி நம்பர் ஒன், டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ், ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

குழந்தையின் முகத்தை காட்டிய ரியோ | Actor Rio shows his baby's face for the first time

அதன் பின்பு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில் அவர் சில வருடங்களுக்கு முன்பு தனது கல்லூரி கால தோழியான ஸ்ருதியை  திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. 'ரித்தி' என்று பெயரிட்டுளள்னர். ஆனால் குழந்தையின் முகத்தை இதுவரை காட்டாத இந்த தம்பதியினர் ஆறாவது மாதத்தில் ரசிகர்களுக்கு தங்களது குடும்ப புகைப்படத்தை காட்டியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

தனது குழந்தையின் முகத்தை காட்டிய ரியோ... அப்படியே அம்மா ஜாடை... வாழ்த்தும் ரசிகர்கள்..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குழந்தையின் முகத்தை காட்டிய ரியோ | Actor Rio shows his baby's face for the first time

People looking for online information on BiggBoss 4, Rio Raj, Sivakarthikeyan, Vijay tv will find this news story useful.