www.garudabazaar.com

ரஜினிகாந்த் வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.. எஸ்.பி.பி உடல்நிலை பற்றி வந்த நல்ல தகவலால் மகிழ்ச்சி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பி-காக நடிகர் ரஜினிகாந்த் புதிய வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

எஸ்.பி.பிக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ | Actor Rajinikanth's latest video for hospitalized singer s.p.balasubrahmanyam

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே கடந்த 14-ஆம் தேதி, அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

எஸ்.பி.பிக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ | Actor Rajinikanth's latest video for hospitalized singer s.p.balasubrahmanyam

இதை தொடர்ந்து அவரது மகன் எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், ''அவரது உடல்நிலை ஸ்டேபிளாக இருக்கிறது. வென்டிலேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. அவர் மெதுவாக குணமடைவார்'' என நம்பிக்கையாக தெரிவித்தார். 

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் எஸ்.பி.பிக்காக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ''50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியாவில் உள்ள பல மொழிகளில் தனது இனிமையான குரலில் பாடி, கோடி கோடி மக்களை மகிழ வைத்த, மதிப்பிற்குரிய எஸ்.பி.பி அவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அபாயக்கட்டத்தை தாண்டி இருக்கும் தகவலை கேள்விப்பட்டதில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் தீவிர சிகிச்சையில் இருக்கிற எஸ்.பி.பி அவர்கள், சீக்கிரம் குணமடைய வேண்டும் என எல்லாம்வல்ல இறவனை வேண்டிக்  கொள்கிறேன்.

 

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பிக்காக ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ | Actor Rajinikanth's latest video for hospitalized singer s.p.balasubrahmanyam

People looking for online information on Rajini Latest Video, Rajinikanth, SP Balasubrahmanyam Hospitalised, SP Balasubramaniam, SPB will find this news story useful.